கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்துவரும் குளிரால் மக்கள் அவதி

தலைநகர் டெல்லி, ஜம்மு, காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது

புதுடெல்லி,

வட மாநிலங்களில் நாளுக்கு நாள் குளிரானது அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, ஜம்மு, காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது.

தலைநகர் டெல்லியில் காலையில் பனிமூட்டத்துடன் வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான பனிப்பொழிவு பெய்து வருகிறது.

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்பநிலையானது 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவானதுடன், ஒரு சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக -1.6 முதல் -3.1 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்