ஜெய்ப்பூர்,
டச்சு நாட்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் சுற்றி பார்த்துள்ளனர்.
இதன்பின்பு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் சிந்தி கேம்ப் பகுதியருகே ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதில், அந்த பெண் சோர்வை போக்க ஆயுர்வேத மசாஜ் செய்யும் நபர் ஒருவரை ஓட்டலுக்கு வரவழைத்து உள்ளார்.
அந்த நபர், ஆயுர்வேத மசாஜ் என கூறி டச்சு நாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கேரளாவை சேர்ந்த பிஜூ முரளிதரன் என்பவரை கத்திபுரா என்ற இடத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரித்ததில், நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து உள்ளார். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடந்து வருகிறது என சிந்தி கேம்ப் காவல் உயரதிகாரி கஞ்சன் சோனி கூறியுள்ளார்.