கோப்பு படம் 
தேசிய செய்திகள்

பீகாரில் கொரோனா பாதித்த கணவரை கவனித்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பீகாரில் கொரோனா பாதித்த கணவரை கவனித்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பாகல்பூர்,

பீகாரில் பாகல்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தனது கணவர் மற்றும் தாயாருக்கு தேவையான உதவிகளை பெண் ஒருவர் செய்து வந்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் வார்டு ஊழியராக இருந்த ஜோதி குமார் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது.

இதனை கவனத்தில் கொண்ட பத்ராகர் காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டு ஊழியரை கைது செய்தனர். தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில், மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக வார்டு ஊழியர்கள் 2 பேரை இந்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்