திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலா கடற்கரைக்கு பிரிட்டனை சேர்ந்த வயதான இமா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயதான ஏமி ஆகிய இரு பெண்கள் சுற்றுலா வந்தனர். இருவரும், கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மது போதையில் வந்த சிலர் அவர்களுக்கு பாலியல் தெல்லை கெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வர்கலா காவல் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஒரு நபரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால் கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் இதே போன்ற சம்பவம் கடந்த ஆண்டு கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் நடந்த போது, அதில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கோவளம் கடற்கரை பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.