தேசிய செய்திகள்

திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் கொடுமை... கர்நாடக பா.ஜ.க. எம்.பி. மகன் மீது புகார்

கர்நாடகாவில் திருமண மோசடி தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில் பாஜக எம்.பியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒய்.தேவேந்திரப்பாவின் மகன் ரங்கநாத் மீது பெங்களூரு பசவனகுடி காவல் நிலையத்தில் 24 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் 42 வயதான ரங்கநாத் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும் இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பர்களான நிலையில், ரங்கநாத் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மது போதையில் பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரங்கநாத்தின் தந்தையிடம் முறையிட்டும் பயனளிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் பேரில் ரங்கநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி