தேசிய செய்திகள்

பனாரஸ் இந்து பல்கலையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - ஷரத் யாதவ் கண்டனம்

மூத்த அரசியல்வாதியான ஷரத் யாதவ் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி நடந்து வரும் பெண்களை கேலி செய்யும் செயல்களால் (ஈவ் டீசிங்) கோபமடைந்த மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கலைப்பிரிவு மாணவி ஒருவரை கேலி செய்ததைத் தொடர்ந்து அவர்கள் வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று இரவு போராட்டம் நடத்திய மாணவர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதைக் கண்டத்துள்ள ஷரத் யாதவ், இது போன்ற சம்பவம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடந்ததில்லை. இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளோம். ஜனநாயகத்தில் இது போன்ற சம்பவங்கள் சகித்துக்கொள்ள முடியாதவை என்றார். இதை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும் என்றும் ஷரத் யாதவ் கூறினார்.

மாணவர்கள் கூறும்போது பெண்களை கேலி செய்வோர் குறித்து பல முறை புகார் அளித்தும் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். எனினும், நிர்வாகத்தரப்பு மாணவர்களின் போராட்டாம் அரசியல் ரீதியில் நடத்தப்படுவது என்றும் பல்கலையின் நற் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் செயலாக இருக்கிறது என்றும் கூறுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை