புதுடெல்லி
மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களை கைப்பற்றியது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உத்தவ் தாக்ரே தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டமன்றக் கட்சியின் தலைவராக மூத்த சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், கட்சிக்கு ஆதரவை வழங்கிய சுயாதீன எம்.எல்.ஏக்கள், ஆகியோர் மராட்டிய கவர்னரை சந்திக்க உள்ளனர்.