தேசிய செய்திகள்

தாக்கரேக்கள் உள்ள இடம் தான் சிவசேனா-சஞ்சய் ராவத் கருத்து

ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் புதிய ஆட்சியை அமைத்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் புதிய ஆட்சியை அமைத்து உள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சிவசேனாவில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், " பா.ஜனதா அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால், அவர்களுக்கு 2 ஆண்டுகளாவது முதல்-மந்திரி பதவி கிடைத்து இருக்கும். நாங்களும் மகாவிகாஸ் கூட்டணி பரிசோதனையை மேற்கொண்டு இருக்க மாட்டோம். சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் தான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளனர். இதனால் சிவசேனா பலவீனம் ஆகவில்லை. தாக்கரேக்கள் எங்கு உள்ளார்களே அதுதான் சிவசேனா. " என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு