தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: குடிபோதையில் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை

கர்நாடகாவில் குடிபோதையில் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

தட்சிண கன்னடா,

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் புஞ்ஜல்கட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் வசித்து வந்தவர் பாபு நாயக்கா (வயது 40). இவரது மனைவி சுகந்தி.

இந்த தம்பதிக்கு சாத்விக் என்ற மகன் இருந்துள்ளார். பாபு நாயக்கா தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், நாள்தோறும் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாபு தனது மகனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த பாபுவின் மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?