கோலார்,
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் நகரை சேர்ந்த பூவரசனின் மனைவி நந்தினிக்கு மாவட்ட அரசு குழந்தைகள் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில், குழந்தை பிறந்ததால் மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வார்டில் இருந்தபேது, அங்கு வந்த மூன்று பெண்கள், குழந்தையை கெஞ்சி விளையாடுவதுபேல் தூக்கிச் சென்று நீண்டநேரமாகியும் வரவில்லை.
இதுகுறித்து காவல்நிலையத்தில் பெற்றேர் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மூன்று பெண்களும், குழந்தையை பையில் மறைத்து வெளியே செல்வது தெரியவந்தது. கோலார் - தமிழக எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி பேலீசார் விசாரித்ததில், குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சுவாதி என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்த குழந்தையை பெற்றேரிடம் ஒப்படைத்தனர்.