ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏனைய 4 பேரும் பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்தவர்கள் என்று ராணுவம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், சோபியான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். பிரிவினைவாதிகள் முழு அடைப்பு அழைப்பால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பொது போக்குவரத்து வாகங்கள் இயங்கவில்லை. சில தனியார் வாகனங்களும் கேப்களும் இயங்கின.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரமுல்லா மாவட்டத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.