கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!

கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். அவருக்கு காங்கிரசில் தேசிய அளவில் பதவி அளிக்கப்படும் என்று யூகங்கள் எழுந்தன. சோனியாகாந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தேசிய அளவில் உங்களுக்கு பதவி அளிக்கப்பட உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த சித்தராமையா, அது தவறான தகவல். கர்நாடகாவில், வருகிற 30-ந் தேதி நடக்க உள்ள 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து சோனியாவுடன் பேசினேன். தேசிய அரசியல் பற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எனக்கு கர்நாடக அரசியலில்தான் ஆர்வம் உள்ளது. ராகுல்காந்தி எனக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்க முன்வந்தபோது கூட அதை மறுத்துவிட்டேன். காரிய கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். கர்நாடக மாநில காங்கிரசை மாற்றி அமைப்பது பற்றி சோனியாவுடன் பேசவில்லை. பொதுச்செயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் ஒரு பட்டியல் அளித்தேன். அதுபற்றி என்னுடன் பிறகு பேசுவதாக அவர் தெரிவித்தார் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்