தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலா மருத்துவ மனை அழைத்து வரப்பட்டார் சித்து

மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில நவ்ஜோத் சிங் சித்து அழைத்து வரப்பட்டார்.

பஞ்சாபில் கடந்த 1988-ல் சாலையில் நடந்த சண்டையில், ஒருவரை காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாட்டியாலா சிறையில் சித்து அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில நவ்ஜோத் சிங் சித்து அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக, மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு உணவுகள் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சித்து மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து, சித்துவிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்