கஹே ( அருணாச்சல பிரதேசம்)
அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் உள்ள மொபைல் போன்களில் சீன சிக்னல் காட்டப்படுகிறது. அதில் சீன நேரம் காட்டப்படுவதுடன், எழுத்துக்களும் சீனாவின் மாண்டரின் மொழியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துடன் 'வெல்கம் டு சீனா' மெசேஜ்களும் வருவதாக எல்லைப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதியில் இருந்து பீஜிங் நகரை அடைய இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மொபைல் போன்களில் பீஜிங் நகரின் சிக்னலும், நேரமும் காட்டப்படுகிறது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
எல்லைப் பகுதியில் இருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றாலும் சீன சிக்னல் மாற பல மணி நேரம் எடுத்துக் கொள்வதாக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.