தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம்: மத்திய அரசுக்கு ‘சீரம்' நிறுவனம் கோரிக்கை

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் எனவும் சீரம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனே இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, மும்பையில் நேற்று நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், எங்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசி ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் விற்பனை ஆகிறது. ஆனால் அதை இந்தியாவில் இப்போது கோவின் பயன்பாட்டில் வைக்க முடியாது.

ஏனென்றால் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்றும், நாங்கள் அதை விற்க முடியாது. இந்தியாவில் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது என கூறினார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி, 2-வது டோஸ் போட்டதில் இருந்து 9 மாதங்கள் என்றிருப்பதை 6 மாதங்களாக குறைப்பது பற்றி அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு