கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தேசியக்கொடியை அவமதித்த நபர் கைது

தேசியக்கொடியை அவமதித்த நபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சில்வஸ்சா,

தத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சில்வஸ்சாவில் உள்ள இறைச்சிக்கடையில் பணிபுரிந்து வரும் ஒருவர், தேசியக்கொடி மூலம் இறைச்சியை சுத்தம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சில்வஸ்சா போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது தேசிய சின்னங்களை இழிவுபடுத்துதல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்