தேசிய செய்திகள்

அவசர மனுக்கள் பட்டியலிடாததால் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் மீது தலைமை நீதிபதி அதிருப்தி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நேற்று சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் மீது அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து தலைமை நீதிபதி கூறியதாவது:–

தினத்தந்தி

புதுடெல்லி,

தங்கள் மனுக்களை அவசர மனுவாக ஏற்றுக்கொள்ளுமாறு ஏராளமான வக்கீல்கள் என்னிடம் முறையிடுகிறார்கள். பதிவாளரிடம் ஏதோ தவறு இருக்கிறது. நான் எவ்வளவோ முயற்சி செய்தும், உத்தரவிட்டும், அவசர மனுக்கள் பட்டியலிடப்படுவது இல்லை. இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

எங்கள் உத்தரவை மீறி, சில மனுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. ஐகோர்ட்டில் வாரத்துக்கு 6 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், மறுநாளே பட்டியலிடப்படுகின்றன. ஆனால், இங்கு ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும், பட்டியலிடப்படுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலிஜியத்தின் செயல்பாடுகளை விட, கீழ் கோர்ட்டுகளில் நீதிபதிகள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு குறைபாடு ஆகியவையே நீதித்துறைக்கு கவலை அளிப்பதாக மற்றொரு மனு விசாரணையின்போது தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்