புதுடெல்லி,
எஸ்ஐஆர் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் இதுதொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கத் தயரா? என்றும் ராகுல், அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த முகாம் மேற்கொள்ளும் பணி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்களில் இந்த பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள மாநிலங்களில் தற்போது சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 13 கோடிக்கும் மேலான வாக்ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பானோர் உயிரிழந்தவர்கள் என்றும் , இடம் பெயர்ந்தவர்ள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களை புறந்தள்ளி விட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக கடும் விதிகளை சேர்த்ததால் ஏராளமானோர் நீக்கப்பட்டதாகவும். புதிய வாக்காளர்களை சேர்க்க இயவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஞானேஷ்குமார் விவகாரத்தில் ராகுலுக்கும் அகிலேஷூக்கும் அமித்ஷா சவால்விடுத்துள்ளார்.
எஸ்ஐ ஆர் விவாகரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்படி சிறப்புக்கூட் டம் கூட்டுவதற்கு ராகுலும் அகிலேஷூம் சம்மதிக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகளை அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.