தேசிய செய்திகள்

சிவ்பால் யாதவை கட்சியில் சேர்க்க அகிலேஷ் எதிர்ப்பு - தந்தையின் அறிவுரையை புறக்கணித்தார்

சிவ்பால் யாதவை கட்சியில் சேர்க்க அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தந்தையின் அறிவுரையையும் அவர் புறக்கணித்தார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநில தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. சமாஜ்வாடி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அகிலேஷ் யாதவின் மாமா சிவ்பால் யாதவ், பிரகதிஷீல் சமாஜ்வாடி லோஹியா என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி பிரித்த ஓட்டுகளே 20 தொகுதிகளில் சமாஜ்வாடியின் தோல்விக்கு காரணம் என தெரிகிறது. மாயாவதியும், யாதவ் குடும்ப பிரச்சினையே இந்த தோல்விக்கு காரணம் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சமாஜ்வாடி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிவ்பால் யாதவ் உள்பட கடந்த 2 ஆண்டுகளில் பிரிந்து சென்ற மூத்த தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி எடுத்தனர். இதற்காக யாதவ் குடும்பத்தில் ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் குடும்பத்தினர் உள்பட மூத்த தலைவர்களின் அறிவுரையை அகிலேஷ் யாதவ் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை