தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் சொகுசு விடுதி இடிந்து விழுந்து விபத்து: 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் சொகுசு விடுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

ஷிம்லா,

இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் சோலான். சிறந்த சுற்றுலாத்தளமான இந்த மாவட்டத்தில் நாஹன் - குமர்ஹாட்டி சாலையை ஒட்டிய பகுதியில் 4 மாடிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இந்த சொகுசு விடுதி தீடிரென நேற்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் 42 பேர் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களில் 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் ராணுவர் வீரர்கள் ஆவர். இன்னும் 7 பேர் வரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை