தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் பேருந்து நிலைய சுவற்றின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

தெலுங்கானாவில் பேருந்து நிலைய சுவற்றின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.#Telangana #CarAccident

ஹைதராபாத்,

தெலுங்கானாவில் பேருந்து நிலையத்தின் சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள டோலிசோவ்கி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நாகர்ஜூன்சாகர் அணைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த கார் நால்கொண்டா மாவட்டத்திலுள்ள நார்சர்லாபள்ளி அருகே சென்றுக்கொண்டிருக்கையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பேருந்து நிலையத்தின் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து போலீசார் கூறுகையில், டிரைவர் அதிவேகமாக காரை ஓட்டியதினாலேயே கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலைய சுவற்றின் மீது மோதியதாக சந்தேகிக்கிறோம். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு