ராய்பூர்,
தண்டேவாடாவின் சோல்நார் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தில் மாநில சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. காயம் அடைந்த இரு வீரர்கள் ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் ராய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கிடையே பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையும் நடக்கிறது.