கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று, 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,720 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் நேற்று, 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,720 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,52,996-லிருந்து 4,49,56,716 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு என்ணிக்கை 5,31,564-லிருந்து 5,31,584 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 7,698 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,84,955 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175-லிருந்து 40,177 ஆக குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது