தேசிய செய்திகள்

சிறுசேமிப்பு வட்டி குறைப்பை திரும்பப் பெறவேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

சிறுசேமிப்பு வட்டி குறைப்பை திரும்பப் பெறவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு சமீபத்தில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறியதாவது:-

நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்ததுபோல வரலாற்றில் வெகு சில அரசுகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மோடி அரசு அதற்காக பெரும்பாலான மக்கள் முதலீடு செய்துள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்து தண்டனை வழங்கியுள்ளது. வெற்றி தேடித்தந்த மக்களுக்கு அரசு வழங்கி இருக்கும் பரிசு இதுதான்.

இந்த வட்டி குறைப்பை அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். இந்த பிரச்சினையை நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே காங்கிரஸ் எழுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு