பாட்னா
பீகார் மாநிலம் பஷ்சிம் சம்பாரனில் நடைபெற்ற பிரசார பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு போதுமான அளவு எதையும் செய்யவில்லை. "பீகாரில் போதுமான வேலைகள், வசதிகள் இல்லை, அது உங்கள் தவறு அல்ல. இது உங்கள் முதலமைச்சர் மற்றும் பிரதமரின் தவறு என கூறினார்.
தர்பங்காவில் உள்ள குஷேஷ்வர் அஸ்தானில் பேரணியில் உரையாற்றிய ராகுல்காந்தி தசரா நிகழ்வில் பஞ்சாபில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றார். "நிதீஷ்ஜியும் மோடிஜியும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தியதால் நீங்கள் அதைப் பார்க்கவில்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.
தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கு எதிராக சிறு கடைக்காரர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.