தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து புகை மூட்டம்: 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன

டெல்லியில் ஒருவாரத்திற்கும் மேலாக தொடர்ந்து புகை மூட்டமான சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புதுடெல்லி,

இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.

ஒருவாரத்திற்கும் மேலாக மாசு கலந்த பனிமூட்டம் நிகழ்வதால் சாலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடும் குளிரும் காணப்படுகிறது. குறைந்த பட்ச வெப்ப நிலை 12.4 டிகிரி செல்சியாக பதிவானது. காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 93 சதவீதம் அளவுக்கு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் புகை மூட்டம் காரணமாக 69 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 22 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்தால், பனிமூட்டம் அதிகரித்தாலும் கூட புகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக காற்று தூய்மைபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...