தேசிய செய்திகள்

தேசிய பணமாக்குதல் திட்டம் : வயிறு எரியும் காங்கிரஸ் - ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கிடைப்பதை ராகுல்காந்தியால் பொறுத்துகொள்ள முடியவில்லை என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார்.

புதுடெல்லி

அரசின் செத்துகளை குத்தகைக்கு விட்டு அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கேடி ரூபாய் திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.

இது குறித்து ராகுல் காந்தியும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்பேது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆண்ட 70 ஆண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை என குற்றஞ்சாட்டும் பா.ஜ.க. தற்பேது அதே 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செத்துகளை விற்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர் கூறும் போது ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சொத்துகளைத் தனியாருக்கு குத்தகை அளித்து 6 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தினால், வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என ராகுல்காந்தி அச்சம் தெரிவித்தார்.

பெருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்காததே இந்த அவல நிலைக்கு காரணம். மேடி அரசின் இத்திட்டத்தால் ஒவ்வெரு துறையிலும் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கமே நிலவும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மத்திய அரசின் திட்டத்தினால் நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கிடைப்பதை ராகுல்காந்தியால் பொறுத்துகொள்ள முடியவில்லை.

பணமாக்கும் திட்டத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்து விடுமே என்பதால் தான் காங்கிரசுக்கு வயிறு எரிகிறது. தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்கள், 40 ரெயில்வே நிலையங்கள் 15 ரெயில்வே ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை பெற அரசு திட்டமிட்டுள்ளது.

70 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தொகுதியாக இருந்தும் அமேதியில் ஒரு மாவட்ட அரசு மருத்துவமனை கூட கட்டப்படவில்லையே என கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்