புதுடெல்லி
சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகள் அதிக அளவில் நடமாடத் தொடங்கி விட்டன. சில பத்திரிக்கை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற நிறுவனங்கள், மக்களின் பொழுதுபோக்குகள், அபிமானங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு பிடித்தவாறு பொய்யான செய்திகளை பரப்பி தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்து வந்தது வெளித்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகமத் படேல்செய்தி ஊடகத்தில் தவறான செய்திகளை சரிபார்க்கும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பினார்.
போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை நான் பாராட்டுகிறேன், ஆனால் என்னுடைய புரிதலுக்கான சில கேள்விகள்:
நேர்மையான நிருபர்களைத் துன்புறுத்துவதற்கு இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதற்கு உத்தரவாதம் என்ன?
யார் போலி செய்தி என்னவென்று தீர்மானிப்பவர்? என்றெல்லாம் கேள்வி விடுத்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சும்ருதி இரானி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) ஆகியவை அரசின் கட்டுபாட்டில் இல்லை.
மத்திய அரசு பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி இதுகுறித்து விரைவில் விதிகளை வகுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் நிருபர்களை இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதிமீறயது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வருங்காலத்தில், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என தெரிவித்துள்ளது.