புதுடெல்லி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் இடையே எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் எல்லை தாண்டிய நிகழ்வு மற்றும் துப்பாக்கி சூடுகள் இந்த ஆண்டு இதுவரை 1,570 போர் நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2003-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர பதிவுகளைவிட அதிகமாக உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி டிசம்பர் 2 தேதி வரை இந்த ஆண்டு காஷ்மீர் எல்லை பகுதியில் 86 வீரர்கள் உயிர் இழந்து உள்ளனர். 247 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வடக்கில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஜும்ஜுண்ட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
"கடந்த காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நாங்கள் பதிலடி கொடுத்ததைப் போல, இது எங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நேரத்தில் தகுந்த இடத்திலும் இருக்கும்," என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மற்றொரு ராணுவ அதிகாரி கூறும்போது, பாகிஸ்தான் தரப்பில் சிறு பீரங்கிகள், ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தான் இராணுவம் அதன் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் உபகரணங்களை மேம்படுத்தியுள்ளது. அவர்கள் மறைந்து இருந்து சுடும் துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் துப்பாக்கி வீரர்கள் கூட சிறந்த பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.
நமது துப்பாக்கி சுடும் போக்கிற்கு ஒரு கடுமையான மாற்று தேவை. மறைந்து இருந்து சுடும் துப்பாக்கி மூலம் துருப்புக்களின் இயக்கம் தடை செய்யப்பட்டதன் மூலம், தந்திரோபாயத்தை தடுக்க முடியும் என கூறி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் மறைந்து இருந்து இந்திய இலக்குகளை குறிவைக்கிறது. இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு வேறுபட்ட முன் அடையாளத்தை கொடுக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் மறைந்து இருந்து சுடும் துப்பாக்கி மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் ஒட்டு மொத்தமாக நமது படைகளின் சேதம் இரட்டிப்பாகின்றன என கூறி உள்ளார்.