தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் பனி மூட்டம் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அடர் பனிமூட்டத்தால் ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது. கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரபிரதேசம்,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

கடும் பனி மூட்டத்தால் அதிகாலை நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்துடன் நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்.

இந்த நிலையில், வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா டெல்லி, உத்தரகாண்ட் , ராஜஸ்தான் சண்டிகார், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை