தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 61.10 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 61.10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடுகிற திட்டம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இப்போது இந்த திட்டம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது.

இது வரை நாட்டில் 61 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 573 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 67,87,305 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:-

18 - 44 வயதுமுதல் தவணை - 231895731, இரண்டாம் தவணை - 23374357

45 - 59 வயதுமுதல் தவணை - 23374357, இரண்டாம் தவணை - 51317222

60 வயதுக்கு மேல்முதல் தவணை - 84943408, இரண்டாம் தவணை - 43305309

சுகாதாரத்துறைமுதல் தவணை - 10356040, இரண்டாம் தவணை - 8292060

முன்களப் பணியாளர்கள்முதல் தவணை - 18314022, இரண்டாம் தவணை - 12854105

மொத்தம்61,10,43,573