பெங்களூரு,
2013 ஆம் ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானி, போதிய தூக்கமின்மை இன்றி விமானத்தை இயக்கியதே காரணம் எனவும், இந்திய விமானப் படையின் பைலட்டுகள், இரவு நேரங்களில் மிக அதிகமாக சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பதால் தான், அவர்களால் சரிவர தூங்க முடிவதில்லை என்று இந்திய விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனோவோ மேலும் கூறுகையில், விமானிகளில் பலர், இரவு நேரங்களில் மிக அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிகிறது. இதனால், காலையில் விமானங்களை இயக்க வரும் அவர்கள் சரி வர தூங்குவதில்லை என்பது தெரிகிறது. முன்னரெல்லாம், ஒரு விமானி குடித்திருக்கிறார் என்றால், கண்டுபிடித்து விட முடியும். ஒருவர் இல்லையென்றாலும், இன்னொருவர் அதை கண்டுபிடித்து, விமானத்தை இயக்குவதிலிருந்து பைலட்டை தடுத்து விடுவார். இப்பொதெல்லாம் ஒரு விமானி குடித்திருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள சோதிப்பான்கள் கூட இருக்கிறது.
எனவே, விமானிகளுக்குப் போதுமான தூக்கம் கிடைத்திருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழியை நாம் கையாள வேண்டும். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இதற்கு சரியான வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.சமூக வலைதளங்கள் என்பது நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக மாறிவிட்டாலும், நம் தொடர்பியல் திறன்களை அது பாதிக்கிறது என்று வருத்தப்பட்டார்.