ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அக்னூர் பிரிவில் முகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உடலின் மேற்பகுதியில் திடீரென்று குண்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் ராணுவ மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் உதம்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அவர் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உள்ளார். இந்த வாரத்தில் நடந்துள்ள 2வது சம்பவம் இது. கடந்த 7ந்தேதி ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பிரிவில் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த வருடத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் நடந்த 1,250 போர்நிறுத்த விதிமீறலால் 24 பாதுகாப்பு படையினர் உள்பட 52 பேர் பலியாகி உள்ளனர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து உள்ளனர்.