கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் உயிரிழப்பு

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ளமோடர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையின் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து