தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு

டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை, ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

புதுடெல்லி,

ஜார்கண்டில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து ஜே.எம்.எம். கட்சியின் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவியேற்று உள்ளார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று டெல்லியில் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

ஜார்கண்டில் அரசிலும், கட்சியிலும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என்.சிங்கும் கலந்து கொண்டார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை