புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூடியது.
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வேலையில்லா திண்டாட்டம், கொரோனா காலத்தில் நடைபெறும் தேர்தல்களுக்காக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஓராண்டு பதவியில் இருந்துள்ள நிலையில், அந்த பதவியில் இருந்து விலக சோனியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சோனியாவே தலைவராக நீடிக்க கட்சி செயற்குழு கூட்டத்தில் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.