தேசிய செய்திகள்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்; நடிகர் சோனு சூட்டின் சகோதரி போட்டியிடுகிறார்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தற்போதே காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் களப் பணியை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மல்விகா சூட் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சோனு சூட் இந்தத் தகவலை தெரிவித்தார். எனினும், எந்த கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற தகவலை சோனு சூட் தெரிவிக்கவில்லை. சோனு சூட் தனது பேட்டியின் போது கூறியதாவது;- எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. எனது சகோதரி சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வார் என்றார். எனினும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே சிறந்த கட்சிகள்தான் என்றும் சோனு சூட் பேட்டியின் போது குறிப்பிட்டார்.

அண்மையில் பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை சோனு சூட் சந்தித்தார். அதேபோல், கடந்த காலங்களில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலையும் சோனு சூட் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சோனு சூட், கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்றார்.

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்தல், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி என பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்தார். இதனால், இந்திய அளவில் பல தரப்பினராலும் சோனு சூட் பாரட்டை பெற்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு