தேசிய செய்திகள்

ஹூண்டாய் சர்ச்சை பதிவு: தென் கொரியா வருத்தம் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட கருத்து தொடர்பாக, திங்கள் கிழமை தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெறப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைபிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா அளித்த விளக்கத்தில், ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையில் வெளியான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்தது. எனினும், இந்த விவகாரத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளிப்படையான மன்னிப்பு கோரவில்லை என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட கருத்து தொடர்பாக, திங்கள் கிழமை தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் கோரியதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் இந்திய பிராந்திய ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது.

இதில் எந்த வித சமரசத்திற்கும் இடம் கிடையாது என தூதரிடம் எடுத்து விளக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு பேசிய தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி சங் இ யோங், தனது வருத்தத்தை பதிவு செய்ததாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை