புதுடெல்லி
டெல்லி, மும்பை, சென்னை உட்பட 6 மெட்ரே நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைவாக நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் கூறி உள்ளது
இந்நிலையில், தெற்கு ரெயில்வேயில் தான் பெண்களுக்கு அதிகமான பாலியல் வன்கெடுமை சம்பவங்கள் நடப்பதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே கூறுகையில், நாடு முழுவதும் ரெயில்வேயில் பதிவு செய்யப்படும் குற்றங்களில் 20 சதவீத குற்றங்கள் தெற்கு ரெயில்வேயில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2014 முதல் 2016 வரையில், நாடு முழுவதும் 982 பாலியல் வன்கெடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 206 வழக்குகள் தெற்கு ரெயில்வேயில் மட்டும் பதிவானதாகவும் ரெயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#SouthernRailway #molestation #latesttamilnews