தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை

தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்மேற்கு பருவமழை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் இன்று தொடங்கியிருக்கிறது.  இதன் மூலம் நாடு முழுவதும் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வழக்கமாக 8-ஆம் தேதிதான் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை  வழக்கத்தை விட 6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. முன்னதாக, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மே 30-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு