தேசிய செய்திகள்

“சபாநாயகர்கள் நடுநிலை பிறழ்வது அதிகரித்து வருகிறது” - கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து

சபாநாயகர்கள் நடுநிலை பிறழ்வது அதிகரித்து வருவதாக கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கர்நாடகாவில், 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அப்போது, சபாநாயகர்கள் செயல்பாடு குறித்து நீதிபதிகள் பரபரப்பு கருத்து வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது:-

நடுநிலையாக செயல்பட வேண்டியது, சபாநாயகர்களின் அரசியல் சட்ட கடமை ஆகும். சபையை நடத்தும்போதும், புகார் மனுக்களை விசாரிக்கும்போதும் அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதை சபாநாயகர்கள் கவனமாக பின்பற்ற வேண்டும். முடிவு எடுப்பதில், அவர்களின் அரசியல் அபிமானம் குறுக்கே வரக்கூடாது.

அவர்கள், தங்கள் அரசியல் கட்சியில் இருந்து விலகி இருக்க முடியாவிட்டாலோ, நடுநிலை உணர்வுக்கு மாறாக செயல்பட்டாலோ மக்கள் நம்பிக்கையை பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், அரசியல் கட்சிகள், குதிரை பேரத்திலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மக்களுக்கு நிலையான அரசு கிடைப்பதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், 10-வது அட்டவணையின் சில அம்சங்களை வலுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகள் நடைபெறாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை