தேசிய செய்திகள்

ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம்

ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரோம் நகரில் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருகிறார்கள்.

அவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த தனி (787 டிரீம்லைனர்) விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது.

இந்த விமானம் அங்கு தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லிக்கு திரும்பும் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று முதல் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் சர்வதேச விமானங்கள் தரையிறங்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...