கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இளைஞர் துர்கா பூஜை குழு ஒன்று, அங்கு பிரமாண்ட பந்தல் போட்டு வருகிறது.
பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய வான்தாக்குதலை மையமாக வைத்து இந்த பந்தலை அவர்கள் அமைத்து வருகின்றனர். இதில் விமானப்படையினரின் தாக்குதல், பயங்கரவாதிகள் உயிரிழப்பு உள்ளிட்டவை உள்பட 65 மாதிரிகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதைத்தவிர விழாவுக்கு வருபவர்களை தமிழகத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி அபிநந்தன் வரவேற்பது போன்ற முழு உருவ மாதிரி ஒன்றும் வைக்கப்படும் என குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்ராந்த் சிங் தெரிவித்தார்.