கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனா 3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக்குழு: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

கொரோனா 3-வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 3-வது அலையும் இந்தியாவை பதம்பார்க்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் 3-வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், 3-வது அலை வந்தால் அதற்காக நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். எனவே அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதற்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி 3-வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக்குழு அமைப்பது, போதுமான படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை கடந்த முறையை விட அதிகமாக வைத்திருப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்