தேசிய செய்திகள்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - ரஷிய தூதர் தகவல்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலாய் குடஷேவ் தெரிவித்தார்

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலாய் குடஷேவ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருவது குறித்து இரு தரப்பும் பேசிவருகின்றன. ஆனால் கொரோனா தொற்று சூழ்நிலையை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய-ரஷிய பன்முக உறவை மேலும் வளர்ப்பதன் அவசியத்தை இரு தரப்புமே மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு வானமே எல்லை.

ரஷியாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்படுத்தப்படுவதும், அது தொடர்பான ஒத்துழைப்பு அதிகரிப்பதும் பெருமை அளிக்கிறது. கொரோனா சான்றிதழ்களுக்கு இரு நாட்டு பரஸ்பர அங்கீகாரம் குறித்து தொடர்ந்து பேசுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்