தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஸ்ரீநகர் என்.ஐ.டி. மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஷ்மீரில் ஸ்ரீநகர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) படிக்கும் 24 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை ஹஜ்ரத்பால் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் தொடங்கி நடந்து வருகின்றன்.

நாட்டில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து இருந்தது. ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி வந்தது. இந்நிலையில், டெல்லி, கேரளா உள்பட 5 மாநிலங்களில் கடந்த வார தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கண்காணிப்புடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

இந்த சூழலில், காஷ்மீரில் ஒரே கல்வி மையத்தில் படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு