புதுடெல்லி,
ஆன்லைன் வாயிலான வருமானவரி தாக்கலுக்கான (இ-பைலிங்) புதிய இணையதளத்தை வருமானவரித் துறை நேற்று தொடங்கியது.
http://incometax.gov.in என்ற இந்த புதிய இணையதளம், பழைய இணையதளத்துக்கு மாற்றாக, பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வருமானவரி செலுத்துவோருக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வருமானவரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.