தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் பன்வாரிலால் புரோஹித்

மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாக்பூர்,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை