தேசிய செய்திகள்

ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு 12 கோடி தடுப்பூசி கிடைக்கும் - மத்திய அரசு தகவல்

கொரோனாவை தடுத்து நிறுத்த மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசி கிடைக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை வேரடி மண்ணோடு வீழ்த்துவதில் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதன்காரணமாகத்தான் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் முழு வீச்சுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொய்வின்றி தொடர்வதற்கு பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தடையாக உள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மே மாதத்தில் தடுப்பூசி திட்டத்துக்கு 7.94 கோடி தடுப்பூசிகள் கிடைத்தன. இதில் 4.03 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டன. 3.90 கோடி நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் வினியோகிக்கப்பட்டன.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி சப்ளைக்கான ஒதுக்கீடு என்பது, அவர்களின் நுகர்வு முறை, மக்கள் தொகை, வீணாகும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

* ஜூன் மாதத்தைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்.

இதில் 6.09 கோடி தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு செலுத்த முன்னுரிமை அடிப்படையில் வினியோகிக்கப்படும்.

* மேலும் 5.86 கோடி தடுப்பசிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் கிடைக்கும்.

வீணாவதை குறையுங்கள்...

* தடுப்பூசி வினியோக அட்டவணை பற்றி மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

* தடுப்பூசிகள் வீணாகுவதை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநிலங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்