தேசிய செய்திகள்

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரை மண்ணின் மைந்தர் என்று கூறினார். ஆனால், அவருடைய பேரன் ராகுல் காந்தியோ, சாவர்க்கரை அவதூறாக பேசுகிறார்.

மேலும், ராகுல் காந்தி குடும்பம், அரசியல் ஆதாயத்துக்காக காந்தி என்ற பெயரை திருடி, தங்களது குடும்பப்பெயராக ஆக்கி விட்டது. ஆகவே, காந்தி என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு